X

ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறாதது வேதனை அளிக்கிறது – மிட்செல் மார்ஷ்

15-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ரிஷப்பண்ட் தலைமையிலான டெல்லி அணி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. அந்த அணி 14 புள்ளிகள் எடுத்து 5-வது இடத்தை பிடித்தது. மும்பை அணிக்கு எதிரான தனது கடைசி லீக் ஆட்டத்தில் டெல்லி வெற்றி பெற்றால் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறலாம் என்ற நிலை இருந்தது. ஆனால் அந்த ஆட்டத்தில் தோற்று டெல்லி வெளியேறியது.

இந்த நிலையில் டெல்லி தகுதி பெறாதது குறித்து அந்த அணியில் விளையாடிய ஆஸ்திரேலியா வீரர் மிட்செல் மார்ஷ் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

நாங்கள் (டெல்லி அணி) ஐ.பி.எல். இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியாமல் போனது அவமான கரமானது. இது வேதனை அளித்தது. ஐ.பி.எல். போட்டி தொடக்கத்தில் எனக்கு சிறிய காயம் ஏற்பட்டது. பிறகு ஒரு போட்டியில் விளை யாடினேன். அப்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் சற்று நடுக்கம் ஏற்பட்டது. அதன்பின்னர் மீண்டும் போட்டிகளில் விளை யாடியது மகிழ்ச்சியாக இருந்தது. நான் 3-வது வரிசையில் பேட்டிங் செய்வதை விரும்புகிறேன். அதை 20 ஓவர் கிரிக்கெட்டில் எனது சிறந்த நிலைப்பாடு என்று நான் நிச்சயமாக உணர்கிறேன். மேலும் பவர்பிளேவில் பேட்டிங் செய்வதை விரும்பினேன். என்னால் 3-வது வரிசை யில் தொடர்ந்து நிலைத்து நிற்க முடியும் என்று நம்புகிறேன். சர்வதேச கிரிக்கெட் மிகவும் கடினமானது. உலகில் எந்த அணிக்கு எதிராக எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.