ஐபிஎல் தொடரில் இருந்து இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய் விலகல்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஜாசன் ராயை ரூ.2 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணி ஏலத்தில் வாங்கியிருந்தது. இந்த நிலையில் 31 வயதான ஜேசன் ராய் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல்.-ல் இருந்து திடீரென விலகியுள்ளார். கட்டுப்பாடுகளுடன் கூடிய கொரோனா தடுப்பு பாதுகாப்பு வளையத்தில் (பளோ பபுள்) நீண்ட நாட்கள் இருப்பது சோர்வை ஏற்படுத்தும் என்பதால் இந்த முடிவுக்கு வந்திருப்பதாக அவர் குஜராத் அணி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார்.

15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் வருகிற 26-ந்தேதி மும்பையில் தொடங்க உள்ள நிலையில் அவரது விலகல் அணி நிர்வாகத்தை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. சுப்மான் கில்லை தவிர்த்து அந்த அணியில் பிரத்யேக தொடக்க ஆட்டக்காரராக ஜேசன் ராய் மட்டுமே இருந்தார். அவருக்கு பதிலாக மாற்று வீரர் யார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.

FacebookTwitterWhatsAppCopy LinkShare
AddThis Website Tools