ஐபிஎல் 2024 – பஞ்சாப்பை வீழ்த்தி ஐதராபாத் வெற்றி

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 23-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஐதராபாத் அணியில் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மா களமிறங்கினர். ஹெட் 21 மற்றும் 16 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்துவந்த ஏய்டன் மார்க்ரம் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்த சன்ரைசர்ஸ் அணிக்கு நிதிஷ் குமார் ரெட்டி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவில் இருந்து மீட்டார். இவர் 64 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இம்பேக்ட் வீரராக களமிறங்கிய ராகுல் திரிபாதி 11 ரன்களிலும் கிளாசன் 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த அப்துல் சமத் சிறப்பாக ஆடி 25 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

இறுதியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்களை குவித்துள்ளது. பஞ்சாப் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய அர்தீப் சிங் 4 விக்கெட்டுகளையும், ஹர்ஷல் பட்டேல் மற்றும் சாம் கர்ரன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க வீரர் பேர்ஸ்டோவ் 0, பிரப்சிம்ரன் சிங் 4, தவான் 14 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து ராசா – சாம் கரண் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாம் கரண் 29 ரன்னில் வெளியேறினார். அடுத்த சிறிது நேரத்தில் ராசா 28 ரன்னில் அவுட் ஆனார். இதனையடுத்து ஷஷாங்க் சிங் – அசுதோஷ் சர்மா ஜோடி சேர்ந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். பரப்பரப்பாக சென்ற இந்த போட்டியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் துரதிஷ்டவசமாக தோல்வியை தழுவியது. ஷஷாங்க் சிங் 46 ரன்னிலும் அசுதோஷ் சர்மா 33 ரன்னிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஐதராபாத் அணி தரப்பில் புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools