ஒரே ஆட்டத்தில் 7 நோ பால்கள் போட்டு மோசமான சாதனை படைத்த இந்திய கிரிக்கெட் அணி

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது போட்டியில் இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியிடம் தோல்வியை தழுவியது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரானது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

நேற்று முன் தினம் நடைபெற்ற இந்த இரண்டாவது ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்களை குவித்தது. பின்னர் 207 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 190 ரன்களை மட்டுமே குவித்ததால் 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது மட்டுமின்றி சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அயர்லாந்து அணியை பின்னுக்கு தள்ளி ஒரு மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளது.

இதுவரை சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் ஒரே ஆட்டத்தில் 5 நோ பால்களை வீசி அதிக நோ பால் வீசிய அணியாக அயர்லாந்து முதலிடத்தில் இருந்தது. ஆனால் நேற்று முன் தின போட்டியில் இந்திய அணி 7 நோ பால்களை வீசி ஒரே போட்டியில் அதிக நோ பால்களை வீசிய அணி என்ற மோசமான சாதனையை படைத்துள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools