ஒவ்வொரு மசூதியாக கோவில்களை தேடினால், பின்னர் கோவில்களிலும் புத்த மடாலயங்களை ஏன் தேடக்கூடாது? – சமாஜ்வாதி கட்சி தலைவர் சுவாமி பிரசாத் மயூரா கேள்வி

வாரணாசி மற்றும் மதுராவில் மசூதிக்குள் கோவில் இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சித் தலைவர் சுவாமி பிரசாத் மயூரா கூறியதாவது:-

உத்தரகாண்டில் உள்ள பத்ரிநாத் மற்றும் கேதர்நாத் கோவில்கள், புரியில் உள்ள ஜெகநாத் கோவில், கேரளாவில் உள்ள ஐயப்ப சுவாமி கோவில், மகாராஷ்டிரா பந்தர்புரில் உள்ள விதோபா கோவில் ஆகியவற்றில் புத்த மடாலயங்கள் இருந்தன. இந்த புத்த மடாலயங்கள் இடிக்கப்பட்டு, அந்த இடங்களில் இந்து கோவில்கள் உருவாகின. அங்கு 8-ம் நூற்றாண்டு வரை புத்த மடாலயங்கள் இருந்தன.

என்னுடைய நோக்கம் கோவில்கள் புத்த மடாலயங்கள் ஆக வேண்டும் என்பது அல்ல. ஆனால், நீங்கள் ஒவ்வொரு மசூதியாக கோவில்களை தேடினால், பின்னர் ஒவ்வொரு கோவில்களிலும் ஏன் புத்த மடாலயங்களை தேடக்கூடாது?” எனக் தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேச மாநில பா.ஜனதா தலைவர் புபேந்திர சிங் சவுத்ரி, ”சமாஜ்வாதி கட்சி மற்றும் அதன் தலைவர்களால் மீண்டும் மீண்டும் சனாதன தர்மம் அவமதிக்கப்பப்டுகிறது எனக் குறிப்பிட்டுள்ளார். இந்துக்கள் புனித தலமாக கேதர்நாத், பத்ரிநாத், ஜெகநாத் புரி விளங்குகிறது. இது சர்ச்சைக்குரிய கருத்து மட்டுமல்ல. இது அவரின் அற்பமான மனநிலை மற்றும் அரசியலையும் காட்டுகிறது.

இந்தியா மற்றும் உத்தர பிரதேசத்தில் உள்ள கோடிக்கணக்கான இந்துக்களின் உணர்வை புண்படுத்துகிறது. சமூகத்தில் வெறுப்பை உண்டாக்கியுள்ளது. மயூரா இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். சமாஜ்வாடி கட்சி இதை ஏற்றுக்கொண்டால், அதுகுறித்து அகிலேஷ் யாதவ் கருத்து விளக்கம் அளிக்க வேண்டும்” என்றார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news