ஓய்வு முடிவை முன்கூட்டியே அறிவித்ததற்காக வருந்துகிறேன் – சானியா மிர்சா விளக்கம்

இந்தியாவின் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. 35 வயதான அவர் 2003-ம் ஆண்டு முதல் சர்வதேச போட்டிகளில் விளையாடி வருகிறார். சானியா மிர்சா 6 கிராண்ட்சிலாம் பட்டங்களை கைப்பற்றி உள்ளார். பெண்கள் இரட்டையர் பிரிவில் 3 பட்டங்கள், கலப்பு இரட்டையர் பிரிவில் 3 பட்டங்கள் என 6 கிராண்ட்சிலாம் பட்டங்கள் வென்றுள்ளார்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிக்கு பிறகு இந்த சீசனுடன் ஓய்வு பெறப் போவதாக சானியா மிர்சா ஏற்கனவே தெரிவித்திருந்தார். நேற்று நடந்த கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் சானியா- ராஜீவ்ராம் ஜோடி தோல்வி அடைந்தது.

இந்த தோல்வியை தொடர்ந்து டென்னிஸ் போட்டியில் இருந்து சானியா விடைபெற்றதாக செய்திகள் வெளியாகின. இதுகுறித்து சானியா மிர்சா கூறியதாவது:-

இந்த சீசனுடன் ஓய்வு பெற இருப்பதாக சமீபத்தில் அறிவித்து இருந்தேன். இதுபற்றியே தொடர்ந்து கேட்கின்றனர். ஓய்வு முடிவை முன்னதாக அவசரமாக அறிவித்ததற்காக வருந்துகிறேன். என்னை பொறுத்தவரையில் இந்த ஆண்டு முழுவதும் போட்டிகளில் விளையாடுவேன்.

வெற்றி அல்லது தோல்வி எதுவாக இருந்தாலும் 100 சதவீத திறமையை வெளிப்படுத்துகிறேன். சில நேரங்களில் வெற்றி கிடைக்கும். ஏமாற்றமும் வரும். நான் விளையாடும் போட்டிகள் அனைத்திலும் வெற்றிபெற விரும்புகிறேன். விரைவில் எனது ஓய்வு முடிவை அறிவிப்பேன்.

இவ்வாறு சானியா மிர்சா தெரிவித்துள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools