கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கிய அஜித் ரசிகர்கள்!

அஜித் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘விஸ்வாசம்’ வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், முதல் நாள் கொண்டாட்டத்தின் போது அஜித் ரசிகர்கள் சிலர் மோதலில் ஈடுபட்டதும், கட் அவுட் கட்டும்போது விபத்தில் சிக்கியதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, இந்த சம்பவங்கள் அஜித் ரசிகர்கள் மீது தவறான கண்ணோட்டத்தையும் ஏற்படுத்தியது.

ஆனால், அனைவரும் அப்படியல்ல, ஒரு சிலர் செய்யும் தவறுக்காக ஒட்டு மொத்த ரசிகர்களையும் குறை கூற கூடாது, என்பதை சொல்லாமல், செயலில் செய்து காட்டியிருக்கிறார்கள் ஒரு தரப்பு அஜித் ரசிகர்கள்.

ஆம், வடகாடு அஜித் ரசிகர்கள், தங்களது தலயின் ‘விஸ்வாசம்’ படத்தை வேறு விதமாக கொண்டாடியிருக்கிறார்கள். அதாவது, கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கி தங்களது கொண்டாட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

மேலும், தங்களைப் போல பல ரசிகர்கள், பல நல்ல விஷயங்களை செய்து வந்தாலும் அதனை வெளியில் சொல்லாமல், ஏதோ ஒரு சில ரசிகர்கள் செய்யும் சில தவறான விஷயங்களை மட்டும் ஊடகங்கள் பெரிதுப்படுத்துவது சரியானது அல்ல, என்று கூறி தங்களது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools