கருணாநிதி 2ம் ஆண்டு நினைவு தினம் – மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை

முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. முன்னாள் தலைவருமான கருணாநிதியின் இரண்டாமாண்டு நினைவு தினம் தமிழகம் முழுவதும் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடம் சென்றார். கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து, முன்களப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதில், துரைமுருகன், டி.ஆர்.பாலு, கனிமொழி எம்.பி, ஆ.ராசா, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools