கர்நாடக காங்கிரஸ் அரசு பொய்யர்களின் அரசு – மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தாக்கு

மத்திய அரசு வரிப் பகிர்வில் பாரபட்சம் பார்க்கிறது. தென்மாநிலங்களில் அதிக அளவில் வரி வசூல் ஆகும் நிலையில், குறைந்த அளவே ஒதுக்கப்படுகிறது. தென்மாநில வரிகள் வடமாநிலங்களுக்கு செல்கிறது. இதனை எதிர்த்து டெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் போராட்டம் நடத்தப்படும் என கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா அறிவித்தார்.

கர்நாடக மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்களுடன் இணைந்து சித்தராமையான டெல்லி சென்றுள்ளார். அவர் ஜந்தர் மந்தர் போராட்டத்தில் கலந்து கொள்கிறார்.

இந்த நிலையில் கர்நாடக மாநில அரசு போராட்டம் நடத்தும் நிலையில், மத்திய நிதியமைச்சர் கிரிராஜ் சிங், “கர்நாடகாவின் காங்கிரஸ் அரசு பொய்யர்களின் அரசு. ராகுல் காந்தில் பாரத் ஜோடி யாத்திரை (நடைபயணம்) மெற்கொண்டு வரும் நிலையில், காங்கிரஸ் நாட்டை உடைப்பதற்கான யாத்திரையை செய்து கொண்டிருக்கிறது” என்றார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news