X

கல்லூரி மாணவர்களை பாட்டு பாடி அசத்தும் துருவ் விக்ரம்

தன் படம் வெளிவரும் முன்பே தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம் என்ற அந்தஸ்தைப் பெற்று வருகிறார் நடிகர் துருவ் விக்ரம். விக்ரமிற்கு என்று ஒரு தனி அடையாளம் உள்ளது போல் துருவ் விக்ரமிற்கும் தனி அடையாளம் உருவாகி வருகிறது. தெலுங்கில் பெரிய வெற்றிபெற்ற அர்ஜூன் ரெட்டி படம் தமிழில் ஆதித்ய வர்மா என்ற பெயரில் ரீமேக் ஆகி வருகிறது.

இப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் நடிகர் துருவ் விக்ரம் கோயம்புத்தூரில் உள்ள ஜிஆர்டி கல்லூரிக்கு சென்றிருக்கிறார். அங்கு மாணவர்கள் மத்தியில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மான் கராத்தே படத்தில் இடம் பெற்ற ‘உன் விழிகளில்…’ என்ற பாடலை பாடி அசத்தி இருக்கிறார்.

தற்போது இந்த வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.