கள்ளக்குறிச்சி கலவரம் – மக்கள் அதிகார அமைப்பு செயலாளர் திடீர் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் மாணவி ஸ்ரீமதி மர்ம சாவு குறித்து இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். சிறிதுநேரத்தில் அது கலவரமாக வெடித்தது. போலீஸ் வாகனம் மீது போராட்டகாரர்கள் கற்களை வீசினார்கள். இந்த கல்வீச்சு சம்பவத்தில் டி.ஐ.ஜி. பாண்டியன் உள்பட போலீசார் பலர் காயமடைந்தனர். என்றாலும் போராட்டம் ஓயவில்லை.

நேரம் செல்ல செல்ல வன்முறை அதிகரித்தது. பள்ளிக்குள் புகுந்த கும்பல் அங்குள்ள பொருட்களை சூறையாடி தீ வைத்தது. இதில் பள்ளி பஸ்கள், டிராக்டர்கள் எரிந்து நாசமானது. இதனைத்தொடர்ந்து டி.ஜி.பி.சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு கலவரம் கட்டுபடுத்தப்பட்டது.

இந்த வன்முறையில் ரூ.20 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. எனினும் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இதுவரை 329 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை மக்கள் அதிகார அமைப்பு செயலாளர் ராமலிங்கம் திடீரென கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது தனியார் சொத்தை சேதப்படுத்தியது, கலவரத்தை தூண்டியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools