காஃபில் குளித்த நடிகை காஜல் அகர்வால் – வைரலாகும் வீடியோ

தமிழில் பழனி, நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, ஜில்லா, மாரி, கோமாளி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் காஜல் அகர்வால். இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான கோஸ்டி திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் காஜல் அகர்வாலின் பிறந்தநாளான நேற்று முன் தினம் அவர் சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், காஃபி கப்பில் அவர் எகிரி குதித்து குளிப்பது போன்று இடம்பெற்றிருக்கும் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil cinema