‘காக்க காக்க 2’வுக்கு தயாராகும் சூர்யா!

வெற்றிப் படங்களின் அடுத்தடுத்த பாகங்களை எடுப்பதே தமிழ் சினிமாவின் தற்போதைய டிரெண்டாக உள்ளது. அந்த வகையில், வேலையில்லா பட்டதாரி 2, சாமி ஸ்கொயர், சண்டக்கோழி 2, விஸ்வரூபம் 2, மாரி 2, சார்லி சாப்ளின் 2 என சமீபத்தில் வெளியான பெரும்பாலான படங்களுக்கு போதிய வரவேற்பு இல்லை.

இந்த நிலையில், கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா – ஜோதிகா நடிப்பில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற `காக்க காக்க’ படத்தின் இரண்டாவது பாகத்தை உருவாக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. காக்க காக்க படத்தை தயாரித்த கலைப்புலி எஸ்.தாணு, இரண்டாவது பாகம் குறித்து கவுதம் மேனனனிடம் பேசியிருப்பதாகவும், அதற்கான பணிகள் விரைவில் துவங்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதிலும் சூர்யா – ஜோதிகாவை நடிக்க வைக்க முடிவு செய்திருப்பதாகவும், ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைக்க இருப்பதாகவும், அடுத்த வருடம் படப்பிடிப்பு துவங்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கவுதம் மேனன் தற்போது எனை நோக்கி பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம், ஜெயலலிதா வாழ்க்கை பற்றிய இணையதொடரில் பிசியாக இருக்கிறார். இவற்றை முடித்த பிறகே `காக்க காக்க 2′ தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FacebookTwitterWhatsAppCopy LinkShare
AddThis Website Tools