கானா நாட்டில் வெடிப்பொருட்கள் ஏற்றி சென்ற லாரி விபத்துக்குள்ளாகி வெடித்ததில் 17 பேர் பலி!

கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள கானா நாட்டில் வெடிப்பொருட்கள் ஏற்றி சென்ற லாரி மீது பைக் மோதியதில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 17 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். 59 பேர் படுகாயம் அடைந்தனர்.

கானா நாட்டின் மேற்குப்பகுதியில் உள்ள ஒரு தங்கச்சுரங்கத்திற்கு சுரங்க வேலைகளுக்காக வெடிபொருட்களை ஏற்றிக்கொண்டு சரக்கு லாரி சாலையில் சென்றுகொண்டிருந்தது.

அப்போது வேகமாக வந்த பைக் லாரி மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் லாரியில் தீப்பற்றியுள்ளது. இதனால், சரக்கு லாரியில் இருந்த வெடிமருந்து பயங்கர சத்தத்துடன் வெடிக்க தொடங்கியது.

இந்த வெடிவிபத்தில் 17 பேர் உடல்சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 59 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த கோர வெடி விபத்தில் லாரி சென்றுக்கொண்டிருந்த சந்தைப்பகுதி முழுவதும் சர்வ நாசமானது. சக்திவாய்ந்த வெடிமருந்துகள் வெடித்ததில் அருகில் இருந்த பகுதிகள் அனைத்தும் தரைமட்டமாகின.

இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

FacebookTwitterWhatsAppCopy LinkShare
AddThis Website Tools