கார்கில் போய் நினைவு இடத்தில் மரியாதை செய்தார் நடிகர் அஜித்

அஜித் ‘வலிமை’ படத்திற்குப் பிறகு தற்போது எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் ‘ஏ.கே. 61’ படத்தில் நடித்து வருகிறார். ஹைதராபாத், விசாகப்பட்டினம், சென்னை, புனே என பல்வேறு இடங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் அப்டேட் வெளிவரவில்லை என்றாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து கொண்டே இருக்கிறது.

இதனிடையே லடாக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அஜித் மற்றும் அவரது நண்பர்களுடன் இணைந்து நடிகை மஞ்சு வாரியரும் பயணம் செய்து வருகிறார். இந்தநிலையில் நடிகர் அஜித், லடாக்கில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியுள்ளார். தற்போது இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools