கார்த்தி படத்தை கைப்பற்றிய உதயநிதியின் ரெட் ஜெயண்ட்

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் படம் ‘சர்தார்’. இதில் மிரட்டும் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடிக்கிறார். மேலும், ராஷிகண்ணா, ரெஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி ஷர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

எஸ். லக்ஷ்மன் குமார் பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் பிரமாண்டமாக தயாரித்து வரும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கார்த்தி நடித்த படங்களிலேயே இது தான் அதிக செலவில் எடுக்கப்பட்டு வரும் படம்.

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு அசர்பைசான் மற்றும் ஜார்ஜியாவில் நடைபெற்றது. இந்த இரு இடங்களில் நடைபெற்ற காட்சிகளுக்காக மட்டுமே ரூ. 4 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சென்னையில் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘சர்தார்’ திரைப்படம் இந்த வருடம் அக்டோபர் மாதம் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகும்.

மேலும், இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை நடிகர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools