கார் எண்ணுக்காக பல லட்சம் கொடுத்த நடிகர் ஜூனியர் என்.டி.ஆர்

நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். ராம் சரண் நடித்த ஆர்.ஆர்.ஆர். படம் 1000 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இந்தியா முழுவதும் பெருவாரியான திரையரங்குகளில் வெளியான இந்த படத்திற்காக
ஜூனியர் என்.டி.ஆருக்கு 45 கோடி சம்பளம் கொடுக்கப் பட்டிருப்பதாக தெலுங்கு சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தில் நடித்ததன் நினைவாக புதிய பி.எம்.டபிள்யூ. காரை
வாங்கியிருக்கிறார் என்.டி.ஆர்.

கார் பிரியரான இவர் வரிசையாக கார்களை வாங்கிக் குவித்துள்ளாராம். பி.எம்.டபிள்யூ முதல் ரோல்ஸ் ராய்ஸ் வரை கார்களை வாங்கி நிறுத்தியிருக்கும் அவர், அந்த கார்களுக்கு தான் ராசியாக
எண்ணும் 9999 என்ற சீரியல் எண்ணையே நம்பராக வாங்கி வைத்துள்ளாராம். குறிப்பாக, அவருடைய பி.எம்.டபிள்யூ. காருக்கு தன்னுடைய ராசியான எண்ணான 9999-ஐ வாங்க, கிட்டதட்ட 11 லட்சம்
ரூபாய் செல வழித்து அந்த எண்ணை வாங்கியிருக்கிறார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools