காவல் நிலைய மரணங்களில் மற்றும் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை ரூ.7.50 லட்சமாக உயர்வு

காவல் நிலைய மரணங்களில் உயிரிழப்போருக்கான இழப்பீட்டுத் தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7.50 லட்சமாக உயர்த்தி அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

துப்பாக்கிச்சூட்டில் பலியானோருக்கான தொகையும் ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7.50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

காவலர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டவர்களுக்கான தொகையும் ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7.50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்து.

காவலர்களால் நிரந்தர உடல் முடக்கம் ஏற்படுபவர்களுக்கான தொகையும் ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7.50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

தேசிய மனித உரிமைகள் ஆணைய பரிந்துரையை ஏற்று, தமிழ்நாடு அரசு இதை அறிவித்துள்ளது.

இதேபோல் காவலர்களால் உடல் துன்புறுத்தலுக்கு ஆளானது உறுதி செய்யப்பட்டால் அதற்கான இழப்பீட்டுத்தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக அதிகரித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools