காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் எதிரொலி – பாகிஸ்தான் வான்பரப்பை தவிர்த்த பிரதமர் மோடி

பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக நேற்று சவுதி அரேபியா சென்று இருந்தார். காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நேற்று சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தியதில் 26 சுற்றுலாப்பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நடந்ததை தொடர்ந்து பிரதமர் மோடி சவுதி பயணத்தை முடித்துக்கொண்டு இன்று காலை அவசரமாக டெல்லி வந்தடைந்தார். இதையடுத்து பிரதமர் மோடி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி மற்றும் பிற அதிகாரிகளுடன் விமான நிலையித்தில் அவசர ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில் சவுதியில் இருந்து டெல்லி திரும்பும்போது பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வான்பரப்பை தவிர்த்ததாக தகவல் வெளியாகி உள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் காரணமாக பதற்றம் நீடிப்பதால் பாகிஸ்தான் வான் எல்லையை பயன்படுத்துவது தவிர்க்கப்பட்டது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools