கிளம்பாக்கத்தில் இருந்து தாம்பரத்திற்கு இடைநிறுத்தமில்லா பேருந்துகள் இயக்க திட்டம்

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து தாம்பரம் ரெயில் நிலையத்திற்கு செல்லும் பொதுமக்களின் நலன் கருதி, கூடுதலாக மாநகரப் பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் நீண்ட தூரப் பேருந்துகள் 30.12.2023 முதல் கிளாம்பாக்கத்தில் புதிதாக திறக்கப்பட்ட கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து இயக்கப்பட்டு வருகிறது.

இப்பேருந்து முனையத்தை இணைக்கும் வகையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து தாம்பரம் ரெயில் நிலையத்திற்கு செல்லும் பொதுமக்களின் நலன் கருதி, தற்போது இயக்கப்பட்டு வரும் பேருந்துகளோடு, கூடுதலாக மாநகரப் போக்குவரத்துக் கழகமானது தடம் எண். எம்18-ல் 6 பேருந்துகளை இடைநிறுத்தமில்லா பேருந்துகளாக (பாய்ண்ட் டூ பாய்ண்ட்) 10 நிமிட இடைவெளியில் 25.01.2024 அன்று முதல் அதிகாலை 03 மணியிலிருந்து இரவு 10 மணி வரை தொடர்ந்து இயக்க உள்ளது என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news