கீர்த்தி சுரேஷின் புதிய புகைப்படத்தை வெளியிட்ட ‘தசரா’ படக்குழு

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் நானி, அந்தே சுந்தராணிகி படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது தசரா படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்க கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.

மேலும் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் சுதாகர் செருக்குரி தயாரித்துள்ள இப்படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாரயணன் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி வைரலானது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, தசரா திரைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் ‘வெண்ணிலா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. மேலும், இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கிராமத்துப் பெண்ணாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தசரா திரைப்படம் அடுத்த ஆண்டு மார்ச் 30-ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools