குடியுரிமை திருத்த சடத்துக்கு ஆதரவாக கோலம் – பா.ஜ.க. மகளிரணி அறிவிப்பு

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான வாசகங்களுடன் தி.மு.க. மகளிரணி சார்பில் கோலம் போட்டு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கு போட்டியாக பா.ஜ.க. மகளிரணி சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை வரவேற்று கோலம் போடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக பா.ஜ.க. ஊடகப்பிரிவு தலைவர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘பா.ஜ.க. மாநில மகளிர் அணி சார்பில் தமிழகம் முழுவதும் குடியுரிமை சட்டத்தை ஆதரித்து ஜனவரி 1-ந்தேதி(நாளை) புத்தாண்டு அன்று காலை அனைத்து இல்லங்களிலும் கோலம் போடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்று கூறியுள்ளார்.

இதன் மூலம் தி.மு.க.- பா.ஜ.க. மகளிர் அணியினர் இடையே கோலப்போட்டி எழுந்து உள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news