’கென்னடி கிளப்’ படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியது

`ஏஞ்சலினா’, `சாம்பியன்’ படங்களைத் தொடர்ந்து சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் `கென்னடி கிளப்’. சசிகுமார், பாரதிராஜா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த படம் மகளிர் கபடியை கருவாக கொண்டு உருவாகி வருகிறது.

சமுத்திரக்கனி, சூரி, முனீஸ்காந்த், காயத்ரி மற்றும் புதுமுகங்கள் மீனாட்சி, நீது, சவும்யா, ஸ்ம்ர்தி, சவுந்தர்யா உள்ளிட்ட பலரும் நடிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.

படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் டப்பிங் நேற்று துவங்கியதாக சசிகுமார் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தாய் சரவணன் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools