கேன் வில்லியம்சன் காயம் – சிக்கலில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி

நியூசிலாந்து – வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு நாட்கள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. நேற்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் 211 ரன்னில் சுருண்டது. நியூசிலாந்து பீல்டிங் செய்தபோது, அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்ஸ்க்கு இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.

நியூசிலாந்து பேட்டிங் செய்யும்போது கேன் வில்லியம்சன் 74 ரன்கள் சேர்த்தார். ஆனால் அடிக்கடி மருத்துவ உதவி எடுத்துக்கொண்டார். இதனால் வங்காளதேசம் 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்யும்போது, இன்று கேன் வில்லியம்சன் பீல்டிங் செய்யவில்லை.

காயம் மேலும் வீரியம் அடையாமல் இருக்க நியூசிலாந்து அணி நிர்வாகம் முன்னெச்சரிக்கை அடிப்படையில் அவரை பீல்டிங் செய்ய அனுமதிக்கவில்லை. நாளை கேன் வில்லியம்ஸ்-க்கு எம்ஆர்ஐ ஸ்கேன் செய்யப்படுகிறது. அப்போதுதான் அவரது காயம் குறித்த தகவல் முழுமையாக தெரியவரும்.

உலகக்கோப்பை தொடர் நெருங்கும் நேரத்தில் கேன் வில்லியம்சனுக்கு காயம் ஏற்பட்டிருப்பது நியூசிலாந்துக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news