கேரள பட்ஜெட்டை எதிர்த்து இளைஞர் காங்கிரஸ் போராட்டம்

கேரள சட்டசபை கூட்டத்தில் 2023-24-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை முதல் மந்திரி பினராயி விஜயன் முன்னிலையில் நிதி மந்திரி கே.என்.பாலகோபால் தாக்கல் செய்தார்.

பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதில் ரூ.3 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும் வகையில் புதிய வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கேரள பட்ஜெட்டைக் கண்டித்து எர்ணாகுளத்தில் இளைஞர் காங்கிரஸ் போராட்டம் நடத்தினர். போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர்ப் புகை குண்டு மற்றும் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.

பெட்ரோல், டீசலுக்கான செஸ் வரி உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் வரி உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி இளைஞர் காங்கிரஸ் போராட்டம் நடத்தினர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools