கே.எஸ்.ஆர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் அளவு 70 ஆயிரம் கன அடியாக உயரவு

காவிரியின் குறுக்கே மண்டியா மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையும் 2-வது முறையாக நேற்று நிரம்பியது. கேஆர்எஸ் எனப்படும் இந்த அணையின் முழு கொள்ளளவு 124.80 அடியாகும். இந்த அணைக்கு வினாடிக்கு 41,099 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் அணை நிரம்பிவிட்டதால் அணைக்கு வரும் நீர் அப்படியே முழுமையாக திறந்துவிடப்படுகிறது. கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து காவிரியில் பெருமளவு நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. கிருஷ்ணராஜ சாகர் அப்படியே முழுமையாக திறந்துவிடப்படுகிறது. கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து காவிரியில் பெருமளவு நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. கிருஷ்ணராஜ சாகர் எனப்படும் கேஆர்எஸ் அணையில் இருந்து மட்டும் வினாடிக்கு 68,852 கன அடிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழ்நாடு- கர்நாடகா எல்லையான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஒகேனக்கல்லில் காவிரி நீர் வெள்ளமாக பாய்ந்தோடுவதால் கடந்த 10 நாட்களாக அங்கு சுற்றுலா பயணிகளும் அனுமதிக்கப்படவில்லை. காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒகேனக்கல்லில் இருந்து மேட்டூர் அணைக்கு காவிரி நீர் ஆக்ரோஷமாக சென்று கொண்டிருக்கிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டியுள்ளது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 28,856 கன அடியாக உள்ளது. அதாவது மேட்டூர் அணையில் தற்போதைய நீர் இருப்பு 52.662 டிஎம்சி ஆகும்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools