கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்தி நடிகை அபிலாஷா பட்டீல் மரணம்

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதுவரை இல்லாத அளவாக இதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. இது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே நாளில் புதிதாக நிறைய பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது. அதுபோல், நிறைய பேர் கொரோனாவால் பலர் உயிர் இழந்து வருகிறார்கள். இந்த தொற்றுக்கு பிரபலங்களும் உயிரிழந்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரபல இந்தி குணசித்திர நடிகை அபிலாஷா பட்டீல் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார். இவர், சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்த சிச்சோரே, அக்‌ஷய்குமார் நடித்த குட் நியூஸ், பத்ரிநாத் கி துல்ஹானியா உட்பட பல படங்களில் நடித்துள்ளார். டிவி சீரியல்களில் நடித்திருக்கிறார். இவரது மறைவிற்கு பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools