கோலியின் தாடியை கிண்டல் செய்த பீட்டர்சன்

கொரோனா ஊரடங்கால் இந்தியாவே கடந்த 2 மாதங்களாக முடங்கிக் கிடக்கிறது. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருப்பதால், படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருகிறது.

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக சலூன்கள் மற்றும் அழகு நிலையங்கள் திறக்கப்படவில்லை. இதனால் பிரபலங்கள் உட்பட ஏராளமானோர் தங்களது முடி மற்றும் தாடியை திருத்திக் கொள்ள முடியவில்லை.

அந்த வகையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.

அதில் ‘நாம் அனைவரும் வீட்டிற்குள் இருக்கிறோம். இந்த நேரத்தில் மனதிற்கு பிடித்த வி‌ஷயங்களை செய்ய வேண்டும் என்பது மிகவும் முக்கியம். எனக்கு தாடி நன்றாக வளரக்கூடியது. எனவே அதை வீட்டிலே டிரிம் செய்து கொள்ள நினைத்தேன். இதுதான் எனது புதிய தோற்றம்.’ என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பீட்டர்சன் கிண்டலடிக்கும் வகையில் பதிலளித்திருந்தார். ‘இப்போது உங்களது தாடியின் நரை போய் விட்டதா? நீங்கள் ஷேவ் செய்து கொள்ளுங்கள் என்று தெரிவித்திருந்தார்.’

பீட்டர்சன்னின் கிண்டலுக்கு விராட் கோலி நகைச்சுவையாக பதிலளித்தார். ‘உங்கள் டிக்டாக் வீடியோவை விட இது மேல்’ என்று தெரிவித்துள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news