சஞ்சய் மஞ்சரேகரை கடுமையாக விமர்சித்த ஜடேஜா

உலக கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நகரில் நடந்து வருகிறது. இந்திய கிரிக்கெட் வாரியம் இதன் வர்ணனையாளர்களாக சில முன்னாள் வீரர்களை நியமித்துள்ளது.

இதில் முன்னாள் இந்திய வீரரான சஞ்சய் மஞ்சரேகரும் ஒருவராவார். இவரது வர்ணனை பெரும்பாலும் சிக்கலில்தான் முடிகிறது. ஐபிஎல் போட்டிகளிலும் வீரர்களை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார்.

இதனால் பல தரப்பினரும் சஞ்சய் வர்ணனை செய்யக்கூடாது என கூறி வந்தனர். அதன் பின்னர் ஒரு முறை டோனியை குறித்து மிக மோசமாக வர்ணனை செய்தார். இதனால் டோனி ரசிகர்களால் சமூக வலைத்தளங்களில் வறுத்தெடுக்கப்பட்டார்.

கடந்த சில நாட்களாக இவரது வர்ணனை சொந்த விருப்பு வெறுப்புகளை மையப்படுத்தியே இருக்கிறது எனக் கூறி, இவரை வர்ணனை செய்வதில் இருந்து நீக்க வேண்டும் என கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் பிசிசிஐ மற்றும் ஐசிசியிடம் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய வீரர் ஜடேஜாவை குறிப்பிட்டு சஞ்சய் அவரது டுவிட்டர் பக்கத்தில், ‘ஜடேஜா ஒரு துக்கடா வீரர். நான் அணியின் தலைவராக இருந்தால் அணியிலேயே சேர்க்க மாட்டேன்’ என கூறியுள்ளார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஜடேஜா தனது டுவிட்டர் பக்கத்தில், ‘நீங்கள் விளையாடியதை விட இரு மடங்கு ஆட்டத்தை நான் விளையாடி விட்டேன். இப்போதும் விளையாடி வருகிறேன்.

சாதனைப் படைத்தவர்களை எப்படி மரியாதையாக நடத்த வேண்டும் என்பதை முதலில் கற்றுக் கொள்ளுங்கள். வயிற்றுப் போக்கை போன்ற உங்கள் வார்த்தைகளை நான் கேட்டது போதும்’ என கூறியுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news