சதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு ஒரு மாதத்தில் தலா 4 நாட்கள் மட்டும் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

ஆவணி மாத பவுர்ணமி வரும் 10-ந்தேதி வருகிறது. மேலும் ஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு இன்று (8.09.2022) முதல் 11-ந் தேதி வரை 4 நாட்களுக்கு கோவிலுக்கு பக்தர்கள் செல்ல கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது. காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது. வனப்பகுதியில் எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இரவு நேரங்களில் மலைப்பகுதியில் தங்குவதற்கு கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.

மேலும் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் பக்தர்கள் இறங்கி குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அனுமதி அளிக்கப்பட்டுள்ள நாட்களில் மழை பெய்தால் பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools