X

சன் டிவியை விட்டு விலகிய ராதிகா!

பாரதிராஜா இயக்கத்தில் உருவான ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமானவர் ராதிகா. அதற்குப் பிறகு முன்னணி நாயகியாக வலம் வந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளையும் சேர்த்து இதுவரை 300-க்கும் அதிகமான படங்களில் ராதிகா நடித்துள்ளார்.

சின்னத்திரையில் வெளியான நாடகம் மூலம் பலரது இல்லத்தில் ஒருவராக மாறினார். மேலும் படத் தயாரிப்பு, டிவி நிகழ்ச்சிகளில் நடுவர் என அனைத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். தற்போது இவரது ‘மார்க்கெட் ராஜா MBBS’ படம் உருவாகி ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில், தற்போது நிகழ்ச்சித் தொகுப்பாளராக மாறியிருக்கிறார் ராதிகா. தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முழுக்க பெண்கள் மட்டுமே கலந்துகொள்ளும் ‘கோடீஸ்வரி’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.