சமூக நீதிக்காக இறுதி மூச்சுவரை போராடியவர் இரட்டைமலை சீனிவாசன் – அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த சமூக சீர்திருத்த செயற்பாட்டாளர் இரட்டைமலை சீனிவாசனின் நினைவுதினம் இன்று.

“கல்வியே ஒடுக்கப்பட்டோரின் பேராயுதம்” என முழங்கி மக்கள் தொகைக்கு ஏற்ப கல்வி, உரிமை, வேலைவாய்ப்பு, அரசியல் பிரதிநிதித்துவத்தை பெற்றுத் தந்ததோடு சமத்துவத்திற்காகவும் சமூக நீதிக்காகவும் தன் இறுதி மூச்சுவரை போராடிய இரட்டைமலை சீனிவாசனை எந்நாளும் நினைவில் கொள்வோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news