X

சர்வதேச போட்டியில் 400 சிக்ஸர்கள் அடித்த ரோகித் சர்மா!

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் பொல்லார்டு முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து, இந்திய அணியின் சார்பில் ரோகித் சர்மா, கேஎல் ராகுல் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

ஆட்டத்தின் மூன்றாவது ஓவரை காட்ரெல் வீசினார். இந்த பந்தை எதிர்கொண்ட ரோகித் சர்மா அதை சிக்சராக மாற்றினார்.

இந்த சிக்சர் மூலம் சர்வதேச போட்டிகளில் 400 சிக்சர்கள் அடித்தவர் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார் ரோகித் சர்மா.

Tags: sports news