சாராய அமைச்சர் ஏழை எளிய மக்களை பலி கொடுத்துக் கொண்டிருக்கிறார் – அண்ணாமலை தாக்கு

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

சில நாட்களுக்கு முன்னர் மது பாட்டிலுக்குள் இறந்த நிலையில் பல்லி கிடந்த செய்தி வெளிவந்தது. தற்போது மதுபாட்டிலுக்குள் பாசி மிதப்பதாக செய்தி வெளிவந்துள்ளது. மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் விதமாக மதுரை மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடையில் மது வாங்கி குடித்த இருவர் மயக்க மடைந்து வீழ்ந்த நிலையில் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்திருக்கிறார். மற்றொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருக்கிறார்.

தெருவுக்கு தெரு மதுக்கடைகள் திறந்து வைத்ததின் விளைவாக மேலும் ஒரு துன்பகரமான நிகழ்வு நேற்று நடந்திருக்கிறது. 16 வயது பள்ளி மாணவி ஒருவர் தந்தையின் குடி பழக்கத்தால் வேதனை அடைந்து தற்கொலை செய்துள்ளார். ஆனால் இவற்றை பற்றி கவலை இல்லாத தி.மு.க. மது ஆலைகள் நடத்தும் தங்கள் கட்சி காரர்களும், சாராய அமைச்சரும் சம்பாதிக்க ஏழை- எளிய மக்களை பலி கொடுத்துக் கொண்டிருக்கிறது.

கள்ளச்சாராய விற்பனையை தடுக்க திறனில்லாத தி.மு.க. அரசு தற்போது அரசு மதுக்கடைகளில் விற்கப்படும் மதுவால் தொடர்ந்து ஏற்படும் உயிர் பலிகளை என்ன சொல்லி சமாளிக்கப்போகிறீர்கள்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools