‘சிந்துபாத்’ டப்பிங் பணியை தொடங்கிய விஜய் சேதுபதி!

`பேட்ட’ படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக `சூப்பர் டீலக்ஸ்’ படம் திரைக்கு வர இருக்கிறது. அதேநேரத்தில் தான் ஒப்பந்தமாகியுள்ள மற்ற படங்களிலும் விஜய் சேதுபதி தீவிரம் காட்டி வருகிறார்.

அந்த வகையில், பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களை இயக்கிய அருண்குமார், விஜய் சேதுபதியின் 26-வது படத்தை இயக்குகிறார். `சிந்துபாத்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை கே புரொடக்‌ஷன்ஸ் மற்றும் வன்சன் மூவிஸ் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.

அருண்குமார் – விஜய் சேதுபதி மூன்றாவது முறையாக இணைந்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு தென்காசி, மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற நிலையில், தற்போது படத்தின் டப்பிங் பணிகள் துவங்கிவிட்டதாக நடிகர் விஜய் சேதுபதி அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools