சிபிராஜின் ‘கபடதாரி’ படத்தின் பஸ்ட் லுக்கை வெளியிடும் நடிகர் சூர்யா

சிபிராஜ் நடிப்பில் தற்போது ‘கபடதாரி’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. கன்னடத்தில் வெளியான ‘காவலுதாரி’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது.

கிரியேட்டிவ் என்டர்டெயினர்ஸ் அண்ட் டிஸ்டிபியூட்டர்ஸ் சார்பில் லலிதா தனஞ்செயன் இத்திரைப்படத்தை தயாரிக்கிறார். சிபிராஜ் நாயகனாக நடிக்க நந்திதா ஸ்வேதா நாயகியாக நடிக்கிறார்.

மேலும், நாசர், ஜெயப்பிரகாஷ், ஜே.சதீஷ் குமார் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஜான் மகேந்திரனுடன் இணைந்து தனஞ்செயன் திரைக்கதை மற்றும் வசனத்தை எழுதியுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து இறுதி கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சிபிராஜின் பிறந்தநாளான (அக்டோபர் 6) இன்று மாலை நடிகர் சூர்யா வெளியிட இருக்கிறார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools