சிவகார்த்திகேயன் பிறந்தநாளுக்காக ‘எஸ்.கே 20’ வெளியிட்ட சிறப்பு வீடியோ

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் டாக்டர். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ‘டான்’ மற்றும் ‘அயலான்’ படத்தில் நடித்து முடித்து இறுதிக்கட்ட பணிகள் நடந்துவருகிறது. இப்படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்தாக தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனர் அனுதீப் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து சுரேஷ் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு தற்காலிகமாக ‘எஸ்.கே 20’ என பெயரிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் ‘எஸ்.கே 20’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. சிவகார்த்திகேயனின் பிறந்தநாளான நேற்று அவருக்கு வாழ்த்து கூறும் வகையில்  ‘எஸ்.கே 20’ படக்குழு ஒரு வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளது. அதில்  அப்படத்தின் பூஜை காட்சிகள், படப்பிடிப்பில் நடிந்த சில சுவாரசியமான விஷயங்கள் இடம்பெற்றுள்ளது. சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools