சி.எஸ்.கே அணியின் விளம்பர தூதராக நடிகை கத்ரீனா கைஃப் தேர்வு

17-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் லீக் வருகிற மார்ச் மற்றும் மே மாதங்களில் நடத்தப்படுகிறது. ஐ.பி.எல். போட்டியை மார்ச் 22-ந்தேதி தொடங்கி மே இறுதி வரை நடத்த ஐ.பி.எல். நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. ஆனால் உறுதியாக இன்னும் தேதி அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்த முக்கியமான தகவல்கள் அடுத்ததுடத்து வெளிவருகின்றன. சமீபத்தில் சிஎஸ்கே அணி ஐக்கிய அரபு எமிரேட்ஸின் எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனத்தின் ஸ்பான்சர்ஷிப் உரிமையைப் பெற்றது. தற்போது மற்றொரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அது என்னவென்றால், அணியின் பிராண்டு அம்பாசிடராக பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

எனவே எதிர்வரும் சீசனில் சிஎஸ்கே அணி வீரர்கள் பங்கேற்கும் அனைத்து விளம்பரங்களிலும் கத்ரினா கைப்பும் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோன்று போட்டிகளையும் நேரில் கண்டுகளித்து அணியை ஊக்கப்படுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil sports