சீமானுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு நேற்று கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. சீமானுக்கு விடுத்த கொலை மிரட்டல் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையருக்கு புகார் கடிதம் அனுப்பப்பட்டது.

அதில், தேனியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் சீமானுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு வெளியிட்டுள்ளதாக புகார் எழுந்தது. அந்த இன்ஸ்டா ஸ்டோரி பதிவில், சீமானின் தலை விரைவில் துண்டிக்கப்படும், விரைவில் நாதக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டி நிலவும் என பதிவிடப்பட்டது.

இந்த நிலையில், சீமானுக்கு கொலை மிரட்டல் விடுத்த சந்தோஷ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools