சூர்யாவின் ‘வணங்கான்’ படத்தின் இசைப்பணி தொடங்கியது

இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து வரும் படம் ‘வணங்கான்’. இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை ‘2டி என்டர்டைன்மெண்ட்’ நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் பாடல்கள் ரெக்கார்ட் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதனை ஜி.வி. பிரகாஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ‘வணங்கான்’ படத்தைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் எஸ். தாணு தயாரிப்பில் உருவாகும் ‘வாடிவாசல்’ திரைப்படத்தில் சூர்யா நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

FacebookTwitterWhatsAppCopy LinkShare
AddThis Website Tools