X

சூர்யா நடித்த குறும்படத்தின் பாடல் இன்று வெளியாகிறது

கொரோனாவால் கடும் பாதிப்பை சந்தித்துள்ள திரையுலகிற்கு நிதி திரட்டும் நோக்கில் ‘நவரசா’ என்கிற ஆந்தாலஜி வெப் தொடர் உருவாகி இருக்கிறது. நவரசங்களை அடிப்படையாக கொண்டு உருவாகி உள்ள இந்த ஆந்தாலஜி தொடரை 9 இயக்குனர்கள் இயக்கி உள்ளனர். இதனை மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்த வெப் தொடரில் இடம்பெறும் 9 குறும்படங்களில், கவுதம் மேனன் – சூர்யா கூட்டணியில் உருவாகும் ‘கிட்டார் கம்பி மேலே நின்று’ குறும்படமும் ஒன்று. இந்நிலையில், இந்த குறும்படம் குறித்த சர்ப்ரைஸ் அப்டேட் வெளியாகி உள்ளது.

அதன்படி, ‘கிட்டார் கம்பி மேலே நின்று’ குறும்படத்தில் இடம்பெறும் ‘தூரிகா’ எனும் பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தப் பாடலை கார்த்திக் இசையமைத்து பாடியுள்ளார். மதன் கார்க்கி இப்பாடல் வரிகளை எழுதி உள்ளார். நவரசா வெப் தொடர் வருகிற ஆகஸ்ட் 6-ந் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.