X

சூர்யா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார்

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள `என்ஜிகே’ திரைப்படம் மே 31ம் தேதி வெளியாக இருக்கிறது. சூர்யா தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் காப்பான் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை முடித்த பிறகு `இறுதிச்சுற்று’ பட இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். சூர்யாவின் 38-வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். பாடலாசிரியர் விவேக் பாடல்களை எழுதுகிறார்.

தற்போது இப்படத்தின் இறுதி ஆடியோ வேலைகள் நடந்து வருவதாகவும், விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கூறியிருக்கிறார். இப்படம் ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகும் 70-வது படமாகும்.

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.