சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்தது

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.

137 நாட்களுக்கு பிறகு கடந்த வாரம் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டதால் வாகன ஓட்டிகள், இல்லத்தரசிகள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். அதன் தொடர்ச்சியாக தினமும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னையில் இன்று காலை பெட்ரோல் லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து 107.45 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் 76 காசுகள் உயர்த்தப்பட்டு 97.52 ரூபாய்க்கு விற்பனையாகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools