சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்தது

தங்கம் விலையில் சில நாட்களாக தொடர்ந்து ஏற்றத்தாழ்வு இருந்து வருகிறது. நேற்று பவுனுக்கு ரூ.128 அதிகரித்து ரூ.37 ஆயிரத்து 408-க்கு விற்றது. இந்த நிலையில் தங்கம் விலை இன்று குறைந்தது.

சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.320 குறைந்து ரூ.37 ஆயிரத்து 88-க்கு விற்றது. கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.4 ஆயிரத்து 636 ஆக உள்ளது. தங்கத்தை போலவே வெள்ளி விலையும் குறைந்தது. வெள்ளி கிலோவுக்கு ரூ.1,900 குறைந்து ரூ.60 ஆயிரத்து 400 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.60.40-க்கு விற்கிறது.

கடந்த 1-ந்தேதி முதல் 5 நாட்களுக்கு தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்தது. இதனால் பவுன் மீண்டும் ரூ.38 ஆயிரத்தை தாண்டியது. அதன்பின் விலை குறைந்து ரூ. 38 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. சில நாட்களாக விலையில் ஏற்றத்தாழ்வு காணப்பட்டு வரும் நிலையில் இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. வரும் நாட்களில் விலை இன்னும் குறைந்து பவுன் ரூ.37 ஆயிரத்துக்கு கீழ் வருமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools