சென்னையில் நடைபெறும் இந்தியா – தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி டெஸ்ட் போட்டியை இளவசமாக பார்க்கலாம்

தென் ஆப்பிரிக்கா பெண்கள் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 1 டெஸ்ட், 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. அதில் முதலில் நடைபெற்ற 3 ஒருநாள் போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்கா பெண்கள் அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.

அடுத்தாக டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஜூன் 28 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஜூன் 28ம் தேதி முதல் 1ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையேயான மகளிர் டெஸ்ட் போட்டியை பார்க்க அனுமதி இலவசம் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

இதேபோல், ஜூலை 5, 7, 9 ஆகிய தேதிகளில் நடைபெறும் டி20 போட்டிகளுக்கான டிக்கெட்டை, ஜூன் 29ம் தேதி PAYTM insider இணையத்தில் வாங்கி கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 போட்டிகளுக்கான டிக்கெட் விலை 150 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools