சென்னை செண்ட்ரல் ரெயில் நிலையத்தில் திருடப்பட்ட ஒரு வயது குழந்தை – 4 மணி நேரத்தில் மீட்ட போலீசார்

ஒடிசா மாநிலத்தில் இருந்து நேற்றிரவு குழந்தையுடன் வந்த நந்தினி கண்காகர் – லங்கேஸ்வர் தம்பதி சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திலேயே உறங்கிய நிலையில், நள்ளிரவு 1 மணியளவில் குழந்தை காணாமல் போனது. இதில் அதிர்ச்சி அடைந்த தம்பதி உடனடியாக போலீசில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் போலீசார் ரெயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை 2 பேர் தூக்கிச்சென்றது தெரியவந்தது.

இதையடுத்து குழந்தையை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். இந்நிலையில், 4 மணி நேர தேடலுக்குப்பின் கடத்தப்பட்ட குழந்தை குன்றத்தூரில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் குழந்தையை மீட்டு பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.

குழந்தையை கடத்திச் சென்ற ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பரபாஸ் மெண்டல், நமீதா தம்பதியை போலீசார் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FacebookTwitterWhatsAppCopy LinkShare
AddThis Website Tools
Tags: tamil news