X

செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் 10,63,416 பேர் பயணித்துள்ளனர் – சென்னை மெட்ரோ ரெயில் அறிவிப்பு

கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் கடைசி வாரத்தில் மெட்ரோ ரெயில் சேவை நிறுத்தப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து விமானநிலைய மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து வண்ணாரப்பேட்டைக்கு கடந்த செப்டம்பர் 7-ந்தேதியும், பரங்கிமலை மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து கோயம்பேடு வழியாக எம்.ஜி.ஆர். சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு செப்டம்பர் 9-ந்தேதியில் இருந்தும் ரெயில் போக்குவரத்து தொடங்கியது.

இதில் செப்டம்பர் மாதம் 3 லட்சத்து 60 ஆயிரத்து 193 பேரும், அக்டோபர் மாதம் 7 லட்சத்து 3 ஆயிரத்து 223 பயணிகள் உட்பட 10 லட்சத்து 63 ஆயிரத்து 416 பேர் பயணம் செய்தனர்.

இதில் 19 ஆயிரத்து 607 பயணிகள் கியுஆர் குறியீடு பயணச்சீட்டு முறையையும், 4 லட்சத்து 34 ஆயிரத்து 289 பயணிகள் பயண அட்டை முறையையும் பயன்படுத்தினார்கள். மீதம் உள்ளவர்கள் டோக்கன் பயணச்சீட்டு முறையிலும்பயணம் செய்தனர்.

மேற்கண்ட தகவலை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.