ஜம்மு காஷ்மீரில் ரியாசி மாவட்டத்தில் பயங்கர காட்டு தீ

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டம் மர்ஹி என்கிற இடத்தில் உள்ள காட்டுப் பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

ஏக்கர் கணக்கில் பரப்பளவில் உள்ள இந்த காட்டில் தீ வேகமாக பரவி வருகிறது. இதனால், மரங்கள் மற்றும் வனப்பகுதி பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி வருகின்றன. தீ ஏற்பட்டதற்கான காரணம்
குறித்து இன்னும் தெளிவான தகவல் இல்லை.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்து, தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவத்துள்ளனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools