ஜூன் 4ம் தேதிக்கு பிறகு நவீன் முன்னாள் முதல்வராகிவிடுவார் – அமித்ஷா பேச்சு

மத்திய உள்துறை மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவருமான அமித் ஷா இன்று ஒடிசா மாநிலத்தில் உள்ள பத்ராக் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட சந்த்பாலியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அமித் ஷா கூறியதாவது:-

ஜூன் 4-ந்தேதி வரும்போது, நவீன் பாவு நீண்ட காலத்திற்கு முதல்வராக இருக்க முடியாது. அவர் முன்னாள் முதல்வராவார். பா.ஜனதா 21 இடங்களில் 17 மக்களவை தொகுதிகளில் வெற்றிபெறும். 147 சட்டமன்ற இடங்களில் 75-ல் பெற்றி பெற்று ஒடிசாவில் ஆட்சி அமைக்கும்.

தற்போது ஒடிசா இளைஞர்கள் அடுத்த மாநிலங்களுக்கு வேலை தேடிச் செல்கிறார்கள். பா.ஜனதா ஆட்சி அமைத்த பிறகு, நாங்கள் தொழிற்சாலைகளை உருவாக்குவோம். அதன்பிறகு இளைஞர்கள் வேலைத்தேடி வெளி மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய நிலைமை ஏற்படாது.

இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools