ஜெயலலிதா ஜெயிலுக்கு போனதற்கு தினகரன் தான் காரணம் – புகழேந்தி தாக்கு

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே எலச்சிப்பாளையம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் மற்றும் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் கலந்து கொண்ட கர்நாடக மாநில முன்னாள் அ.தி.மு.க. செயலாளர் புகழேந்தி பேசியதாவது:-

எம்.ஜி.ஆர். போட்ட தொப்பியை கொடுத்தவர் ஒரு இஸ்லாமிய அ.தி.மு.க. தொண்டர் தான். அம்மா முதன் முதலாக பதவி ஏற்ற போது பதவி பிரமாணம் செய்து வைத்தவர் ஒரு இஸ்லாமிய பெண்மணியான கவர்னர் பாத்திமா பீவி தான்.

அம்மா ஜெயிலுக்கு போனதற்கு தினகரன் தான் காரணம். தினகரன் குடும்பத்தினர் 20 ஆயிரம் கோடிக்கு சொத்து வைத்துள்ளனர். விரைவில் தினகரன் சிறைக்கு போவது உறுதி. அரசியல் பிழைப்பிற்காக ஸ்டாலின் இஸ்லாமியர்களை தூண்டி விடுகிறார்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும் அமைச்சருமான தங்கமணி பேசியதாவது:-

7½ கோடி தமிழர்கள் மற்றும் 1½ கோடி அ.தி.மு.க. தொண்டர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து வரலாறு படைத்த அம்மா வழியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் அம்மாவின் தாலிக்கு தங்கம், பொங்கல் பரிசு திட்டம், மடிக்கணினி என அனைத்து திட்டங்களையும் தொடர்ந்து கொடுத்து மக்களுக்கான ஆட்சியாக சிறப்பாக செயல்பட்டு கொண்டுள்ளது.

தி.மு.க.வினர் மக்களை பற்றி அக்கரையின்றி ஆட்சியை மட்டும் குறை சொல்லும் ஸ்டாலின் ஒரு போதும் முதல்வராக முடியாது. சிறுபான்மையினருக்கு பிரச்சனை என்றால் முதலில் குரல் கொடுப்பது அ.தி.மு.க. தான். அ.தி.மு.க. ஆட்சியை கலைக்க வேண்டும் என்ற நோக்கில் குடியுரிமை சட்டத்தை பற்றி ஸ்டாலின் பொய் பிரசாரம் செய்து வருகிறார்.

இவ்வாறு அவர் பேசினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news